W3C Web Resources

  • Home
  • Contact Us puthuyugamnews@gmail.com/ +94-75 0591291 / 075 5275227/ 075 2798 718/ 075 5633070

Sunday, June 21, 2015

பங்களாதேஷிடம் சுருண்டது இந்திய அணி!. தொடரையும் இழந்தது


இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதிய இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பகல் இரவு போட்டியாக இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்படுத்தாடிய இந்திய அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ஓட்டங்களில் சுருண்டது. இந்திய அணி சார்பாக அதிக பட்சமாக தவான் 53 ஓட்டங்களையும் டோனி 47 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் அணி சார்பாக முதல் போட்டியில் இந்தியாவை மிரட்டிய ரஹ்மான் இப்போட்டியிலும்  6 விக்கெட்களை வீழ்த்தி இந்திய துடுப்பாட்டத்தை துவம்சம் செய்தார். பதிலுக்கு துடுப்படுத்தாடிய பங்களாதேஷ் அணி 38 ஓவர்களில் 4  விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதன் மூலம் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரில் முன்நிலை வகிக்கின்றது.

No comments:

Post a Comment